இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை அதிரடி சட்டத்தை கொண்டு வந்தாலும் கூட, குற்றங்கள் குறைந்த பாடில்லை. இப்படி இருக்கையில் பழனியில் 10 லட்சம் மதிப்புள்ள புதிய கார் திருட்டு போகி இருப்பதாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு – குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்!
அதாவது, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே புதிய ஆயக்குடியில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி PLA மாருதி கார் விற்பனை செய்யும் கார் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஷோ ரூமில் அல்லிமுத்து(75) என்ற முதியவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல இரவு நேர பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த நேரத்தில் இரவு 11 மணிக்கு மேல் அருகில் உள்ள கடை வாசல் அருகே படுத்து தூங்கி உள்ளார். இதை சுதாரித்து கொண்ட சில மர்ம நபர்கள், கடைக்குள் புகுந்து அங்குள்ள சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்துவிட்டு, கடைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய ஸ்விப்ட் கார் ஒன்றை திருடிச் சென்றனர். அதுமட்டுமின்றி, ஷோரூமில் இருந்த சிசிடிவி, ஹார்ட் டிஸ்க்குகளையும் எடுத்துச் சென்றனர்.
IND vs AUS: 2வது டெஸ்ட் போட்டி – இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் – அதிரடி காட்டிய மிட்சல் ஸ்டார்க்!
கண்ணாடி உடையும் சத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் திருடர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் தப்பித்து சென்றனர். இதனை தொடர்ந்து, ஆயக்குடி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் அல்லிமுத்துவிடம் விசாரணை செய்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்