பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா 2024: தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கிய அங்கமாக இருப்பது தான் பழனி முருகன் திருக்கோயில். ஒவ்வொரு மாதமும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த திருவிழா கிட்டத்தட்ட 10 நாட்கள் நடைபெறும். குறிப்பாக இந்த வைகாசி திருவிழாவின் ஆறாவது நாளான மே 21-ம் தேதி மாலை நேரத்தில் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி – வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதையடுத்து 7ம் நாள் நிகழ்ச்சியாக முருகனுக்கு தேரோட்டம் நடைபெறும். எனவே ஏராளமான பக்தர்கள் முருகனின் ஆசியை பெறுவதற்கு அங்கு படையெடுப்பார்கள். எனவே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகம் மும்மரமாக இருந்து வருவதாக கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார். வருகிற 25 ஆம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சியுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா 2024 – palani murugan temple vaikasi visakam 2024
எல்லையை தாண்டிய படகுகள் – இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது – நடந்தது என்ன?
சமீபத்திய செய்திகள் இதோ
டெல்லி பாஜக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் சீரிஸ்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி
கொடைக்கானல் மலர் கண்காட்சி 2024