பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024): முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமான இடம் தான் பழனி. மலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் மலைக்கு செல்ல மூன்று வழிகள் இருக்கிறது.
பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024)
நடைபாதை, ரயில் பாதை மற்றும் ரோப் கார் சேவை போன்ற வழிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக 2 நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சியை அடையும் வகையில் இந்த சேவை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, ஒவ்வொரு வருடமும் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு மாதம் ரோப் கார் வசதி சேவை நிறுத்தப்படுவது வழக்கம்.
மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024 – 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – என்ன நடந்தது?
அந்த வகையில் இந்த மாதம் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதன்படி, இன்று முதல் அடுத்த 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களை பழனி மலை கோவில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அதிரடி அறிவிப்பு!
ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா?