பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் - என்ன காரணம் தெரியுமா?பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் - என்ன காரணம் தெரியுமா?

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்: தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருந்து வரும் பழனியில் ஏகப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் இருப்பதாகவும், தனியார் வாகனங்கள் சென்று வருவதாக கூறி தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்தனர். அதுமட்டுமின்றி தனியார் வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனால் அந்த பாதையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த விவசாயிகள், தின கூலி மக்கள் ஆகியோர் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அதனை எதிர்க்கும் விதமாக  தேவஸ்தான நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில், பழனி நகர்மன்ற உறுப்பினர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக நேற்று அறிவித்திருந்தனர்.

Also Read: கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு –  மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பழனி நகரில் உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஆட்டோக்கள் அனைத்தையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *