பள்ளிக்கரணை ஆணவ படுகொலை விவகாரம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வந்த செய்தி என்றால் பள்ளிக்கரணை காதலன் கொலை வழக்கு பற்றி தான். சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிரவீன் (26) என்ற இளைஞன் ஜல்லடையான்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்த ஷர்மிளா (22) என்ற பெண்ணை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமணத்திற்கு, காதலுக்கு பெண் வீட்டார் பக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24- ம் தேதி பிரவீன் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் ஷர்மிலாவுடைய அண்ணன் தினேஷ் சம்பந்தம் பட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே தினேஷ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இது ஆணவ கொலை என்பதால் என் அம்மா அப்பாவை ஏன் கைது செய்ய வில்லை என்று கேள்வி எழுப்பி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷர்மிளா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனே அவருடைய மாமனார், மாமியார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஷர்மிளா உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்திய போது, ஷர்மிளா வீட்டில் இருந்து ஒரு டைரியில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்,
மக்களவை தேர்தலில் போட்டியிடும் மாடு மேய்க்கும் பட்டதாரி பெண்? இம்முறை வெற்றி கிட்டுமா?
அதில், “என் கணவர் பிரவீன் இல்லாமல் என்னால் இருக்க முடியல. நான் சாகப் போகிறேன். என் மரணத்திற்கு என்னுடைய தந்தை துரைக்குமார், தாய் சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோர் தான் காரணம். என் கணவரை கொன்று என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க. எங்களை வாழ விடாமல் பண்ணிட்டாங்க. என்னால் அவன் இல்லாத இந்த உலகத்துல வாழ விருப்பம் இல்லை. இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்” என எழுதப்பட்டிருந்தது.