பான் - ஆதார் இணைப்பு... மே 31ம் தேதி வரை காலக்கெடு கொடுத்த வருமான வரித்துறை... எப்படி விண்ணப்பிக்கலாம்? பான் - ஆதார் இணைப்பு... மே 31ம் தேதி வரை காலக்கெடு கொடுத்த வருமான வரித்துறை... எப்படி விண்ணப்பிக்கலாம்? 

பான் – ஆதார் இணைப்பு: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் வாழும் மக்களின் முக்கிய ஆவணமாக பான் மற்றும் ஆதார் கார்டு இருந்து வருகிறது. குறிப்பாக பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் சிலர் இப்பொழுது வரை இணைக்காமல் இருந்து வருகின்றனர். காலக்கெடு கொடுத்த போதிலும் மக்கள் இன்னும் சிலர் இணைக்காமல் இருந்து வரும் நிலையில், தற்போது இது குறித்து வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மே 31-ஆம் தேதி வரை கெடு விதித்துள்ளது. இப்படி மக்கள் இணைப்பதற்கு தவறும் பட்சத்தில் அதிகப்படியான வரி தொகை பிடித்தம் செய்யப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மக்கள் விரைவில் ஆதார் என்னுடன் பான் நம்பரை இணைத்து கொள்ளுங்கள். ஆன்லைன் மூலம் எப்படி இணைக்கலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • முதலில் வருமான வரித்துறை (Income Tax e-filing portal) என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • முதல் பக்கத்தின் இடது புறத்தில் உள்ள குவிக் லிங்க்ஸ் (Quick Links)கிளிக் செய்து பின்னர் ஆதார் லிங்க் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இதனை தொடர்ந்து  உங்களுடைய பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து, Validate பட்டனை க்ளிக் செய்த பின்னர் அபராதம் மற்றும் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் திரையில் தெரியும்.
  • பான் – ஆதார் இணைப்புக்கான வசதியை சமர்ப்பித்து Continue பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் Link Aadhaar என்ற பட்டனை க்ளிக் செய்தால், ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பருக்கு OTP வரும்.
  • வந்த OTP எண்ணை உள்ளீடு செய்த பின்னர் பான் – ஆதார் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
  • அது இணைக்கப்பட்ட பிறகு இ-மெயில் மற்றும் மொபைல் எண்ணிற்கு தகவல் வரும். இதன் மூலம் வெற்றிகரமாக பான் நம்பரை ஆதாருடன் இணைக்க பட்டது.

கவுண்டமணி நிஜ வாழ்க்கைல இப்படியா? செந்திலே பயப்படுவாரு.., உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *