
“பாண்டியன் ஸ்டோர்ஸ்”
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நன்கு கவனம் பெற்ற சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். கிட்டத்தட்ட 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவுக்கு வந்தது. தற்போது அதனுடைய பார்ட் 2 ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் முதல் பார்ட் போல் சுவாரஸ்யம் இல்லை என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படி முதல் பார்ட்டில் நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை சுஜிதா. இவர் இதற்கு முன்னர் பல சீரியல்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவருடைய வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ச்சி நடந்துள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதாவது நடிகை சுஜிதாவின் சகோதரரும் பிரபல இயக்குனருமான சூர்யா கிரண் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் மறைந்த அவர் சமுத்திரம் படத்தில் சரத்குமாருக்கு தங்கச்சியாக நடித்த நடிகை காவேரியின் முதல் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.