பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல் - மக்களே உஷாரா இருங்க!பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல் - மக்களே உஷாரா இருங்க!

உலகமெங்கும் விற்பனையாகி வரும் பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா: இன்றைய உலகத்தில் ரோட்டு கடையில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக பானி பூரி கடையில் பெரும்பாலான மக்கள் கிடையாக கிடக்கின்றனர். ஆனால் அதன் பின் விளைவுகள் குறித்து யாரும் யோசிப்பதில்லை. இப்படி இருக்கையில் உணவு பாதுகாப்பு துறை சில உணவுப் பொருட்களை பான் செய்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் கேன்சர் உண்டாக்கும் பொருட்கள் இருப்பதாக கூறி பான் செய்தனர்.

அந்த வகையில்  பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பானி பூரியை மாதிரிகளைச் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர துறையினர் சேகரித்து ஆய்வு நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த ஆய்வில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது  பானி பூரி தயாரிக்க தேவைப்படும் பொருட்களில் முக்கியமானவையாக சாஸ் மற்றும் மீட்டா பவுடர் கருதப்படுகிறது. அப்படி பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களில் தான் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

எனவே இதை உண்டால் மனிதனுக்கு கண்டிப்பாக தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ” மக்கள் அதிகமாக சாப்பிட்டு வரும் பானி பூரியில் பயன்படுத்தப்படும் காரா மற்றும் மிட்டாவில் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக காரம் சாப்பிடுவதால் அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதை தொடர்ந்து 5 முதல் ஏழு ஆண்டுகள் சாப்பிட்டீர்கள் என்றால் கண்டிப்பாக புற்று நோய் மற்றும் அல்சர் ஏற்படும் என்று கூறியுள்ளார். 

Also Read: பெண்களின் மாதவிடாய் நேரத்தில் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்? இது தான் உண்மையான காரணம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *