Home » சினிமா » பாபநாசம் பற்றி யாருக்கும் தெரியாத உண்மை?.., ஏழு ஜென்ம பாவம் போக்கும் திருத்தலம்!

பாபநாசம் பற்றி யாருக்கும் தெரியாத உண்மை?.., ஏழு ஜென்ம பாவம் போக்கும் திருத்தலம்!

பாபநாசம் பற்றி யாருக்கும் தெரியாத உண்மை?.., ஏழு ஜென்ம பாவம் போக்கும் திருத்தலம்!

papanasam temple history in tamil: தமிழகத்தில் கிட்டத்தட்ட பல கோயில்கள் உள்ளன. அதில் மிகவும் பிரசித்தி பெற்ற தலம் என்றால் அது பாபநாசம் தான். பலரும் இங்கு தான் இறந்து மண்ணை விட்டு பிரிந்தவர்களுக்கு ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று திதி கொடுத்து வருகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.

திருநெல்வேலி – தென்காசி ரயில் பாதையில் உள்ளது. அம்பாசமுத்திரம் ரயில் நிலையம், அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ மேற்கே அமைந்துள்ள தலம்.

papanasam temple history in tamil

இறைவன் – பாபநாசர்.
இறைவி – உலக நாயகி.
தீர்த்தம் – தாமிரபரணி.

பொதிகை மலை அமைந்துள்ள புண்ணிய தலம். தென்னகத்திலேயே என்றும் வற்றாத அகஸ்தியர் நீர்வீழ்ச்சி இங்கு மேலும் புண்ணியத்தை தரவல்லது. அகத்தியர் இறைவனை வழிபட்ட திருத்தலம். இறைவனின் மணக்கோலத்தை கண்டு இன்புற்ற திருத்தலம்.

இறைவனின் திருமண வைபவத்தின் போது தேவர்களனை வரும் திருக்கயிலாயம் சென்று மண விழாவில் கலந்து கொண்டதால் இந்தப் புவிக் கோளே வடக்கு நோக்கி சாய்ந்ததாகவும் அதனை சமன் செய்ய இறைவனே தமிழை உலகினுக்கு ஈந்த அகத்திய மகாமுனியை இத்தலத்தில் வீற்றிருக்கும் தென்பொதிகை மலை மீதிருந்து தனது திருமண விழாவினை கண்டு களிக்குமாறு கூறி தனது திருமண கோலத்தை அகத்தியருக்கு அருள் கோலமாக காட்டியதால், அகத்திய மகாமுனியை இறைவனின் திருமண கோலத்தை கண்டு இன்புற்ற திருத்தலம்.

தாமிரபரணி தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தீர்த்தத்தில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையாகிய மகாளய அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் புண்ணிய நீராடுவர். தமது மூதாதையர்களின் ஆத்மாக்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த தலம்.   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top