பாராலிம்பிக் போட்டிகள் 2024: அனைவராலும் கொண்டாடப்பட ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
பாராலிம்பிக் போட்டிகள் 2024
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைந்த நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரம்மாண்ட விழாவுடன் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கியது. மேலும் இந்த போட்டியில் கிட்டத்தட்ட 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். Shooting competition
இதனை தொடர்ந்து முதல் நாள் போட்டியில் பாரா டேக்வாண்டோ, பாரா டேபிள் டென்னிஸ், பாரா நீச்சல் மற்றும் பாரா சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று பாரா ஒலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவுக்காக கலந்து கொண்ட இந்திய வீராங்கனை அவனி லேக்காரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். avani legara
Also Read: HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை – சென்னை எத்தனையாவது இடம்?
அதேபோல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். paralympics 2024
இதன் மூலம் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
மேலும் இந்தப் பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களே ஜாக்கிரதை – AC மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்
கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?