
பாராலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதன்படி இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்று உள்ளனர். இதுவரை இந்தியாவுக்கு இரண்டு தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று டி 63 உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. எனவே இந்த போட்டியில் இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் மாரியப்பன், ஷரத் குமார், சைலேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாராலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன்
மேலும் 1.88 மீட்டர் உயரம் தாண்டி ஷரத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் தங்கம் பதக்கம் மற்றும் 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். mariyappan thangavelu
Also Read: ஆதாரில் கைரேகை புதுப்பிக்கவில்லையா? அப்ப ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல்? தமிழக அரசு அதிரடி விளக்கம்!
இது அவருக்கு மூன்றாவது பதக்கமாகும். ஏற்கனவே அமெரிக்காவின் ஃப்ரெச் எஸ்ரா 1.94 மீட்டருடன் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து பதக்கம் பெற்று வரலாற்று சாதனை படைத்த அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். paralympics 2024
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை