பாராலிம்பிக் பேட்மிண்டன் 2024: சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியில் கிட்டத்தட்ட 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பாராலிம்பிக் பேட்மிண்டன் 2024
மேலும் நடந்த முதல் நாள் போட்டியில் பாரா டேக்வாண்டோ, பாரா டேபிள் டென்னிஸ், பாரா நீச்சல் மற்றும் பாரா சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. paralympics 2024
இதனை தொடர்ந்து பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு (எஸ்.எல்.3) பைனலில் இந்தியாவின் நிதேஷ் குமார், பிரிட்டனின் டேனியலை எதிர்கொண்டார். இதில் 21-14, 18-21, 23-21 என்ற கணக்கில் டேனியலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
Also Read: பாராலிம்பிக் போட்டிகள் 2024: இந்திய வீராங்கனை அவனி லேக்காரா தங்கப்பதக்கம் வென்றார்!!
ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதலில் அவ்னி லேகரா தங்கம் வென்றுள்ள நிலையில் பாராலிம்பிக் தொடரில் இந்தியா வெல்லும் 2வது தங்கப் பதக்கம் இது. இதன்மூலம் 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 22 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. para badminton men’s single
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை