Paris olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டி 2024: பிரான்ஸ் தலைநகரமான பாரீசில் தற்போது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில் தங்களது அபாரமான திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டி 2024
அதுமட்டுமின்றி பதக்கங்களை கைப்பற்றும் வகையில் முனைப்புடன் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே [Avinash Sable] 3000 மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் 8:15.43 நிமிடங்களில் இலக்கை எட்டி 5 வது இடத்தைப் பிடித்து இறுதி போட்டிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் ஒலிம்பிக் மல்யுத்தம் – பெண்கள் ஃப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதாவது இந்தியாவின் வினேஷ் போகத் முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார்.
Also Read: பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024 – Finalக்கு சென்ற முதல் இந்திய வீரர் அவிநாஷ் சாப்லே – குவியும் பாராட்டுக்கள்!
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வினேஷ் போகத் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் யுய் சுசாகியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்
அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி
பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா