பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024: நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு ஒலிம்பிக் போட்டி தற்போது பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருக்கிறது.
இதே போல் கடந்த 1900 மற்றும் 1924 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இந்நிலையில் இப்பொழுது தான் பாரிஸில் நடக்கிறது. இதற்காக பாரிஸ் நகரமே விழாக் கோலமாக இருந்து வருகிறது. மேலும் 18 நாட்களில் மொத்தம் 32 விளையாட்டுகளில் கிட்டத்தட்ட 329 போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. Athletes
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024
எனவே இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் சார்பாக 70 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்கிறார்கள். அதுமட்டுமின்றி குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் தடகளம், பாய்மரப்படகு, துப்பாக்கிச் சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் கலந்து கொள்ள இருக்கின்றனர். archery
Also Read: தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!
இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு வீராங்கனை புதிய சாதனை படைத்துள்ளார்.
அதாவது தென் கொரியாவைச் சேர்ந்த 21 வயது வீராங்கனையான லிம் சி ஹியோன் 694 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதற்கு முன் 2019-ல் தென் கொரிய வீரர் சேயோங் காங்கின் (692) சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Olympic Games Paris 2024
தமிழகத்தில் புதிதாக 7 ஆயிரம் பஸ் வாங்க முடிவு
சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (26.07.2024)
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்