பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஒலிம்பிக் 2024. 33 வது ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் எப்படி பதக்கங்கள் கொடுக்கப்படுகிறது. முதலாவது போட்டி எப்பொழுது நடந்தது எத்தனை பதக்கங்கள் உள்ளது. இந்த போட்டிகள் தோன்றிய விதம் மற்றும் அவை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக் தோற்றம்:
முதன்முதலில் ஒலிம்பிக் போட்டியானது கி.மு 8 ம் நூற்றாண்டில் தோன்றியது. பழங்கால கிரேக்கத்தில் ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் என்ற கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விழாவாக இது கொண்டாடப்பட்டது. இதில் போருக்கு தயாராவதற்கு உதவக்கூடிய ஓட்டம், மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரை ஏற்றம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு அனுமதி கிடையாது.
ஆனால் இந்த ஒலிம்பிக் போட்டியானது ரோமானியர்களின் படையெடுப்பால் அழிந்து போனது. ரோமானியர்கள் ஒலிம்பிக் போட்டி நடக்கும் இடத்தை இடித்து தள்ளினர். பின்னர் 1400 வருடங்களுக்கு பிறகு அந்த பழமையான ஒலிம்பிக் போட்டி மீண்டும் புத்துயிர் பெற்றது. அதற்கு காரணமானவர் பிரான்ஸ்நாட்டு வரலாற்று ஆய்வாளரும், கல்வியாளருமான பியாரேடி கோபர்ட்டின் ஆவார்.இவர் பல நாட்டு பிரதிநிதிகளை ஒன்றிணைத்து ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார். பின்னர் நவீன ஒலிம்பிக் போட்டியானது ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது.
நவீன ஒலிம்பிக்:
அதன்படி முதலாவது நவீன ஒலிம்பிக் 1896 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிரேக்க தலைநகர் ஏதென்ஸில் நடந்தது.அதில் தடகளம், சைக்ளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டென்னிஸ், மல்யுத்தம், பளுதூக்குதல், வாள் சண்டை போன்ற 9 பந்தயங்கள் இடம்பெற்றன. 14 நாடுகளை சேர்ந்த 241 வீரர்கள் கலந்து கொண்டனர்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி – மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை !
ஒலிம்பிக்கில் முதன் முதலில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் கானொலி ஆவார். ஆரம்பத்தில் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் ஏதும் வழங்கப்பட வில்லை.முதலிடம் பிடித்தவர்களுக்கு வெள்ளியால் ஆன பதக்கமும், ஆலிவ் இலையும் வழங்கப்பட்டது. 2 வது இடத்திற்கு தாமிர பதக்கமும், வெற்றி மாலையும் வழங்கப்ட்டது. 3 வது இடத்திற்கு பரிசு கிடையாது.
பின்னாளில் தான் இந்த முறை மாற்றப்பட்டது. அது முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் என மாற்றம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அமெரிக்கா 11 தங்கம் உள்பட 20 பதக்கத்துடன் முதலிடத்தை பிடித்தது. போட்டியை நடத்திய கிரீஸ் 10 தங்கம், 18 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களுடன் 2 வது இடத்தை பெற்றது.
பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா 2024:
இந்த வருடம் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டி 33 வது ஒலிம்பிக் போட்டியாகும். இது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்க இருக்கிறது. போட்டியானது ஜூலை 26 ல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருக்கிறது. போட்டி நடக்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.