பரிவர்த்தனை முழு திரை விமர்சனம் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் தியேட்டர் சென்று திரைப்படம் பார்ப்பது தற்போது குறைந்து விட்டது. காரணம் தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் OTTயில் சில நாட்களுக்குள் வெளியாகி விடுகின்றது. ஆனால் தியேட்டர் செல்லும் படம் பார்க்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களுக்கு என்று வர இறுதி விடுமுறை தினத்தினை கொண்டாடும் விதமாக திரைப்படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வரிசையில் தியேட்டரில் வெளியாகி இருக்கும் ” பரிவர்த்தனை முழு திரை விமர்சனம் அறிந்து கொள்ளலாம் வாங்க.
” பரிவர்த்தனை ” படக்குழு யார் :
‘ வெட்டு வேட்டு ‘ திரைப்படத்தினை இயக்கிய எஸ். மணி பாரதி இந்த திரைப்படத்திற்க்கு திரைக்கதையை எழுதி திரைப்படத்தினை இயக்கியும் இருக்கின்றார். MSV என்னும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் பொறி . செந்தில் வேல் திரைப்படத்திற்கு கதை , வசனம் எழுதி உள்ளார். ரஷாந்த் அரவின் திரைப்படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.
ஹீரோ , ஹீரோயின் :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் முன்னணி நாயகியாக நடிக்கும் ‘ சுவாதி ‘ திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு பொன்னு சீரியலில் கதாநாயகனாக நடித்த ‘ சுர்ஜித் ‘ தான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர்களுடன் பாரதி மோகன் , ராஜேஸ்வரி , விக்ரம் ஆனந்த் போன்ற பலர் தொலைக்காட்சி நடிகர்கள் நடித்துள்ளனர்.
குழந்தைபருவ காதல் :
ஒரு இயற்க்கை அழகு கொட்டி கிடக்கும் சிறிய கிராமத்தில் கதை ஆரம்பமாகின்றது. பால் விற்கும் சிறுவனும் பண்ணையார் வீட்டு பொன்னும் பள்ளியில் ஒன்றாக படித்து வருகின்றனர். நாட்கள் செல்ல செல்ல இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். இவர்கள் இருவரும் காதல் செய்வது பண்ணையாருக்கு தெரிந்து விடுகின்றது. எனவே பண்ணையார் மகள் தன் உறவினர் வீட்டில் தங்க வைக்கின்றார். பால்கார பையனுக்கும் திருட்டு பட்டம் சுமர்த்தி வீட்டை விட்டு வெளியே துரத்துகின்றார் பண்ணையார்.
லியோ ட்ரைலர் புதிய தகவல் வந்தது ! முக்கிய தகவல் உள்ளே !
டாக்டர் ஆகும் பால்காரப்பையன் :
பால்கார பையனும் இவரின் அப்பாவும் பண்ணையார் அவமானப்படுத்தியதால் தங்கள் சொந்த கிராமத்தினை விட்டு வெளியூர் செல்கின்றார்கள். வெளியூர் சென்ற இந்த பையன் டாக்டர் படித்து பட்டம் பெறுகின்றார். இவருக்கென்று தனி மருத்துவமனையை இவரின் அப்பா கட்டிக்கொடுக்கின்றார். இவருக்கு சுவதியுடன் திருமணமும் தந்தை நடத்தி வைக்கின்றார்.
மறக்க முடியுமா :
டாக்டருக்கு கல்யாணம் ஆனாலும் தன் பள்ளி காதலை மறக்க முடியாமல் மனைவியுடன் வாழ்க்கையை வாழாமல் இருக்கின்றார். அதே சமயம் இவரின் காதலியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றாள்.
வாழ்க்கை திருப்பம் :
டாக்டர் திருமணம் செய்த பொன்னும் இவர் காதலியும் தோழிகள் ஆவர். எனவே தோழியை சந்திக்க காதலி வீட்டிற்கு வருகின்றாள். அப்போது தான் காதலிக்கு தெரிகின்றது தோழியின் கணவர் தன் காதலன் என்று. இப்படியாக கதை செல்ல மனைவிக்கும் தன் தோழி தான் கணவரின் காதலி என்று தெரிய வருகின்றது. இறுதியில் என்ன நடக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்துள்ளது.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்
இறுதியில் நடந்தது என்ன :
காதலியும் கணவரும் மடியில் நின்று பேசிக்கொண்டிருப்பதை கண்ட மனைவி இவர்களின் அருகில் செல்கின்றாள். உங்களுக்கு என் தாலி தான பிரட்சனை என்று சொல்லி தாலியை கழட்டி கணவனிடம் கொடுத்து விட்டு தோழியின் குழந்தையை கூட்டிக்கொண்டு சென்று விடுகின்றாள். திரைப்படமும் முடிந்து விடுகின்றது.
” பரிவர்த்தனை ” கதை இதுதானா :
தன்னுடன் வாழாத கணவருக்கு பிடித்த வாழ்க்கையை கொடுக்கலாம் என்று எண்ணி மனைவி தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றார். பல கதாப்பாத்திரங்கள் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இது தான் திரைப்படத்தின் ஒரு வரி கதையாக இருக்கின்றது.
பரிவர்த்தனை முழு திரை விமர்சனம்
ரசிகர்களின் கருத்து :
இந்த கதை பல திரைப்படங்களில் பார்த்து இருந்தாலும் இந்த திரைப்படத்தில் சில மாற்றங்களை செய்து இருக்கலாம் என்று ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. காத்திருந்தால் காதல் கிடைக்கும் என்றும் திரைப்படம் உணர்த்துகின்றது. தற்போது இருக்கும் காலங்களில் காதலை கூட பரிவர்த்தனை செய்ய முடியுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றது. கதை மெதுவாக நகர்ந்தாலும் நகைசுவை இன்னும் இருந்திருக்கலாம் என்றும் ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது.