நாடாளுமன்ற தேர்தலுக்காக 2,000 சிறப்பு பஸ்கள்.., எந்தெந்த தேதிகளில் தெரியுமா? தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழக போக்குவரத்து கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. ஏழு கட்டமாக நடக்க இருக்கும் இந்த தேர்தல் முதலில் தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த முறை எந்த கட்சி அதிக வாக்குகளை பெற்று வெற்றி கனியை சுவைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இருப்பினும் மக்கள் அனைவரும் தங்களுடைய ஜனநாயக நாட்டின் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

எனவே சொந்த ஊரை விட்டு வெளியூரில் வேலை பார்க்கும் மக்கள் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அன்று 100% வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக முழுவதும் வருகிற ஏப்ரல் 17 மற்றும் 18ம் தேதிகளில் கிட்டத்தட்ட 2000 சிறப்பு பஸ்களை இயக்கப்பட உள்ளதாக தமிழக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அரசு விரைவு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே TNSTC செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

லோக்சபா தேர்தல் எதிரொலி.., அமைச்சர் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை.., பரபரப்பு!!

Leave a Comment