நாடளுமன்ற தேர்தல் 2024 ! விசிகவிற்கு பானை …, மதிமுகவிற்கு தீப்பெட்டி - சின்னங்களை ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம் !நாடளுமன்ற தேர்தல் 2024 ! விசிகவிற்கு பானை …, மதிமுகவிற்கு தீப்பெட்டி - சின்னங்களை ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம் !

நாடளுமன்ற தேர்தல் 2024 !. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற காட்சிகள் கூட்டணியமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன. அதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் விசிக சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த சில நாட்களாக தேர்தல் ஆணையம் விசிகவிற்கு சின்னம் ஒதுக்காததால் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. கடந்த தேர்தல்களிலும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதிமுக திமுக கூட்டணியில் திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளராக வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் மதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

எங்களோட சின்னத்திலயா போட்டி போடுற ! வேட்பாளரை தாக்கிய நாம் தமிழர் கட்சியினர் – 3 பேரை கைது செய்த காவல்துறை !

பம்பரம் சின்னத்தை பெற குறைந்தபட்சம் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கூறி அவர்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இந்நிலையில் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *