அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானது ? பிரேமலதாவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிர்வாகிகள் - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானது ? பிரேமலதாவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிர்வாகிகள் - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏறக்குறைய திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த நிலையில் பாஜக தமிழகத்தின் முக்கிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் தேமுதிக உடன் இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகலகத்தில் முக்கிய நிர்வாகிகளான எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, இளங்கோவனுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆலோசித்து வருகிறார்.

மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.., முன்னாள் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு – வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

அதனை தொடர்ந்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் தேமுதிகவின் நிர்வாகிகள் குழு கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *