பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதியின் வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு என தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் சில நாட்களுக்கு முன் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 10 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாமக சார்பில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
தேர்தலில் களம் இறங்குகிறார் தங்கர் பச்சான் :
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான தங்கர் பச்சான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் அழகி, பள்ளிக்கூடம் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கிய தங்கர் பச்சான் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடப்போவதாக பாமக கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தங்கர் பச்சான் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி கைது.., நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்.., வலுக்கும் கண்டனம்!!
பாமகவின் வேட்பாளர் பட்டியல் :
மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார். அதன் படி
கடலூர் – தங்கர் பச்சான்
திண்டுக்கல் – கவிஞர் திலகபாமா
அரக்கோணம் – வழக்கறிஞர் பாலு
தர்மபுரி – அரசாங்கம்
சேலம் – அண்ணாதுரை
விழுப்புரம் – முரளி சங்கர்
கள்ளக்குறிச்சி – தேவதாஸ்
ஆரணி – கணேஷ் குமார்
மயிலாடுதுறை – ஸ்டாலின்
போன்ற முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.