தேர்தலில் இத்தனை வாரிசு வேட்பாளர்களா. வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக, தேசிய கட்சியான பாஜக போன்ற காட்சிகள் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற முதற்கட்ட தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பின்னணி குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. திமுக மீது வாரிசு அரசியல் சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது அதிமுகவும் அதிகளவில் வாரிசு வேட்பாளர்களை களமிறக்கி இருப்பது பேசுபொருளாகியுள்ளது.
தேர்தலில் இத்தனை வாரிசு வேட்பாளர்களா ?
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
திமுகவை போல வாரிசுகளை களமிறங்கிய அதிமுக :
மக்களவை தேர்தலில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம் மற்றும் SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வீதம் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் 33 வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். இதில் 32 புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் 5 பேருக்கு வாரிசு அடிப்படையில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக மீதும் வாரிசு அரசியல் விமர்சனம் எழத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ! – கடலூரில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டி – அறிவிப்பை வெளியிட்டார் அன்புமணி !
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், முன்னாள் சபாநாயகர் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், ஆற்றல் அசோக்குமார் சவுந்தரம், சிங்கை ராமச்சத்திரன் கோவிந்தராஜ், பாபு பவுன்ராஜ் போன்றவர்கள் வாரிசு அடிப்படையில் போட்டியிடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.