பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் ! புதிய நீதிக்கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு - என்னவா இருக்கும் ?பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் ! புதிய நீதிக்கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு - என்னவா இருக்கும் ?

பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த். தமிழகத்தை பொறுத்தவரை முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேசிய கட்சியான பாஜக போன்ற கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மேலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

மக்களவை தேர்தலில் பாஜக 20 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளிலும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலா 3 தொகுதிகளிலும், TTV தினகரன் கட்சி 2 தொகுதிகளிலும் மற்ற கூட்டணிக்கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் இத்தனை வாரிசு வேட்பாளர்களா ? திமுகவை போல வாரிசுகளை களமிறங்கிய அதிமுக – முக்கிய தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிப்பு !

இந்நிலையில் புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு தொலைபேசி வாயிலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததாக புதிய நீதிக்கட்சி சார்பில் ஆதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சில முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *