பாமக – விசிக நேரடி மோதல். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது மேலும் நாம் தமிழர் கட்சி கடந்த முறை போட்டியிட்டது போலவே தனியாக களம் காண்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. மேலும் பாமக பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளிலும், விசிக திமுக கூட்டணியில் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பாமக – விசிக நேரடி மோதல் :
விழுப்புரம் மக்களவை தொகுதியில் பாமகவும், விசிகவும் தேர்தல் களத்தில் நேரடியாக மோதவுள்ளன. தனித்தொகுதியான விழுப்புரம் மக்களவை தொகுதியில் விசிக சார்பில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அந்த கட்சியின் மாணவரணி செயலாளர் முரளி சங்கரும் நேரடியாக மோதுகின்றன.
மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இவர்தானா ! திமுக சார்பில் சு.வெங்கடேசன் ! அதிமுக சார்பில் டாக்டர்.சரவணன் போட்டி – அனல் பறக்கும் மதுரை அரசியல் களம் !
இதனால் விழுப்புரம் தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுவரை நடந்த 3 தேர்தலில்களில் விசிக ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விசிக மற்றும் பாமக சமபலத்தில் உள்ளதால் இந்த தொகுதியின் மீதான கவனம் அதிகரித்துள்ளது.