பாஸ்போர்ட் சேவை இணையதளம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை இயங்காது - வெளியான அறிவிப்பு !பாஸ்போர்ட் சேவை இணையதளம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை இயங்காது - வெளியான அறிவிப்பு !

தற்போது பாஸ்போர்ட் சேவை இணையதளம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை இயங்காது என சென்னை மண்டல pasport சேவா அதிகாரி தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் பராமரிப்புப் பணி முடிந்த பின்னா் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் சேவைக்கான அரசின் அதிகாரபூர்வ இணையதளம் நேற்று இரவு தொடங்கி, வரும் அக்டோபர் 7-ஆம் தேதி காலை வரை இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட் சேவா அதிகாரி தெரிவித்துள்ளாா். Passport Service official website will be down till 7th October Due to technical maintenance

இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் சேவா அதிகாரி நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட இருப்பதன் காரணமாக, அதிகாரபூர்வ பாஸ்போர்ட் இணையதளம், வரும் அக்டோபர் 5 ஆம் தேதி மாலை தொடங்கி, அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி – போக்குவரத்தில் அதிரடி மாற்றம்

இதனை தொடர்ந்து இந்த நேரத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் இணையதளத்தை பயன்படுத்த முடியாது. எனவே விண்ணப்பதாரா்கள் டைம் ஸ்லாட் ஒதுக்கீடு மற்றும் வேறு ஏதேனும் சந்தேகங்கம் இருந்தால் பராமரிப்புப் பணி முடிந்த பின்னா் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *