பாஸ்போர்ட் சேவை வெப்சைட் இன்று (அக்டோபர் 4ஆம் தேதி) இரவு 8 மணி முதல் வருகிற அக்டோபர் 7ம் தேதி காலை 6 மணி வரை அடுத்த 4 நாட்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெளி நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் கட்டாயம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது
Passport என்பது வெளிநாட்டு அதிகாரிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உங்களின் அடையாளமாகும். எனவே புதிதாக பாஸ்போர்ட் -க்கு Apply செய்பவர்கள் www.passportindia.gov.in என்ற வெப் சைட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வெப்சைட் தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்த வெப்சைட் இன்று இரவு 8 மணி முதல் வரும் அக்டோபர் 7ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை மையம் தகவல்!
இதே போன்ற, தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் காரணமாக கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 23ஆம் தேதி (திங்கட்கிழமை) வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் கனமழை
மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கு
திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை