பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை - தயாரிப்புகளின் உரிமம் ரத்து - அரசு அதிரடி உத்தரவு!!பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை - தயாரிப்புகளின் உரிமம் ரத்து - அரசு அதிரடி உத்தரவு!!

பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை- தயாரிப்புகளின் உரிமம் ரத்து: பாபா ராம்தேவ் சொந்தமாக இயக்கி வரும் நிறுவனம் தான் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலம் கூந்தல் தைலம், பற்பசை, நூடுல்ஸ், சமையல் எண்ணை, தேன், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து குணப்படுத்த முடியாத நோய்கள் கூட பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த விளம்பர பலகையை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை-தயாரிப்புகளின் உரிமம் ரத்து

ஆனால் அதை கண்டுக்காத அந்த நிறுவனம் தொடர்ந்து விளம்பரம் செய்து வந்ததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரினார். மேலும் பெரிய அளவில் மன்னிப்பு விளம்பரம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது . இதை தொடர்ந்து, அந்நிறுவனம் முழு பக்க மன்னிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்நிறுவனத்தின் மருந்துகள் தயாரிப்பதற்கான திவ்யா பார்மசி மற்றும் பதஞ்சலி நிறுவனங்களின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது – தேனி மாவட்டத்தில் பரபரப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *