பவன் கல்யாண், திருப்பதியில் உள்ள திருமலைக்கு பாதயாத்திரை சென்ற போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திருப்பதி கோவில் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்படுவதாக புகார் எழுந்து பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக இருந்து வருகிறது.
திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண்
மேலும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் இது நேர்ந்துள்ளதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து திருப்பதி கோவில் அசுத்தமாகி விட்டது என்று பூசாரிகள் பல ஹோமங்கள் நடத்தினர்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் இருந்து ஏழுமலையானை தரிசிக்க போவதாக தெரிவித்திருந்தார். அதன்படி, விரதத்தை நிறைவு செய்து தன் மகள்கள் ஆத்யா மற்றும் பலினி அஞ்சனி ஆகியோருடன் அவர் திருப்பதிக்கு சென்றார்.
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
இதனை தொடர்ந்து அலிபிரி மலைப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்ட அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், கொஞ்சம் நேரம் அமர்ந்தபடியே ரெஸ்ட் எடுத்துவிட்டு திருமலை சென்றடைந்தார். அவருக்கு ஏற்கனவே, ஆஸ்துமா மற்றும் முதுகு வலி பிரச்சினைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு
உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்?
வானிலை பற்றி தெரிந்து கொள்ள TN Alert செயலி
திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்