
PAYTM சேவை
சமீபத்தில் ரிசர்வ் வங்கி, KYC பிரச்சனை காரணமாக Paytm நிறுவனத்திற்கு தடை விதித்திருந்தது. அதாவது விதிமீறலின் காரணமாக Paytm நிறுவனத்தை தடை செய்ய கடந்த மாதம் 29ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், மார்ச் 15 வரை கூடுதல் அவகாசம் கொடுத்தது. மேலும் இந்த Paytm செயலியை பயன்பாட்டில் இருந்து எடுக்க இருப்பதால், மக்கள் அதை பயன்படுத்துவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்ளுங்கள் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதுமட்டுமின்றி Paytm வாடிக்கையாளர்கள் wallet மூலமாகவோ மற்றும் NCMC மூலமாகவோ பணத்தை பெறுவதோ மற்றும் சேமிப்பு, நடப்பு வங்கி கணக்கு மூலமாகவோ அல்லது Fastag கணக்கு மூலமாகவோ பணத்தை எடுக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற ஆப்கள் மூலம் பணவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும், சொல்லப்போனால் Paytm Payments வங்கி மட்டுமே பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி Paytm அங்கீகரிக்கப்பட்ட ICICI, HDFC மற்றும் பல வங்கிகளில் Paytm ஆப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், UPI பயன்பாட்டை எந்தவித பிரச்சனையும் இன்றி பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.