பொதுவாக அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளிலோ வேலை பார்க்கும் ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பென்ஷன் பணம் வழங்கப்படுவது வழக்கம். இதனை தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை வருகிற பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன்னதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அரசுக்கு அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் பெறப்படும் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளது. அதாவது அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலமாக 5.3 கோடிக்கும் மேலானோர் பயனடைந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
குறிப்பாக மாதந்தோறும் ரூ 1000 முதல் ரூ 5000 வரை ஒவ்வொரு பங்குதாரர்களுக்கும் ஓய்வூதியமாக இருக்கும். மேலும் இந்த விண்ணப்பத்திற்கு பதிய வயது 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். குறிப்பாக பங்குதாரர்கள் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 97 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு இந்த வட்டம் பட்ஜெட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடல் பென்ஷன் யோஜனா தொகையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.