மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாகவும் மற்றும் அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு இன்று(அக் 3)ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியுள்ளார் மகாவிஷ்ணு.
பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு இன்று(அக் 3) ஜாமீன்
அப்போது அவர் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்த நிலையில் அவரை காவல்துறை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அவர் மீது புகார்கள் அதிகமாக எழுந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து புழல் சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண் – திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் – கடைசியில் என்ன நடந்தது?
தற்போது வரை சிறைவாசம் அனுபவித்து வந்த பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சர்ச்சை வார்த்தைகளை அவர் பயன்படுத்த மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு
உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்?
வானிலை பற்றி தெரிந்து கொள்ள TN Alert செயலி
திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்