
பெட்ரோல் விலை குறைப்பு
தற்போதைய காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் விலை கடந்த 663 நாட்களாக குறையாமல் இருந்து வரும் நிலையில், தற்போது மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலை குறைந்ததால் மக்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

மேலும் இந்த திட்டம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இது மாதிரி மக்களை கவர மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின்னர் பெட்ரோல் விலை குறைந்துள்ளதால் மக்கள் சற்று ,மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.