பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கிய கும்பல் - சீல் வைத்து  குண்டர் சட்டத்தில் போட்ட சிபிசிஐடி போலீஸ்!பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கிய கும்பல் - சீல் வைத்து  குண்டர் சட்டத்தில் போட்ட சிபிசிஐடி போலீஸ்!

பண்ருட்டியில் பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கிய கும்பல்: சமீபத்தில் நாட்டையே உலுக்கிய செய்தி என்றால் அது கள்ளக்குறிச்சி கருணா புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து மக்கள் உயிரிழந்த சம்பவம் தான். 60க்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த வழக்கு தற்போது காவல்துறையில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இறந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் இல்லை என்றும், வெறும் தண்ணீரில் கலந்த மெத்தனாலை தான் குடித்துள்ளார்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், பண்ருட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்-ல் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்துள்ளதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிபிஐ பெட்ரோல் பங்க் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் மெத்தனால் பதுக்கி இருப்பதை பார்த்து, பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்து அடைத்தனர்.

மேலும் அந்த பெட்ரோல் டேங்கில் கிட்டத்தட்ட 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

Also Read: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி – களைகட்டும் வாக்குப்பதிவு!!

இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் கைதான இருதயராஜ், பழனிசாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.

இந்த 5 பேரும் சங்கராபுரம் மற்றும் சின்னசேலம் பகுதிகளில் 5 பேரும் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *