PF அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 50 ஆயிரம் போனஸ்: ஊழியர்கள் வேலை விட்டு நிற்கும் பொழுது பிற்காலத்தில் யாரை நம்பியும் இருக்காமல் தன்னைத்தானே காத்துக்கொள்ள தான் பிஎஃப் கணக்கை தொடங்குகிறார்கள். அதன்படி அவர்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட பணம் எடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது. பிற்காலத்தில் அதை எடுத்து ஊழியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு முக்கிய பங்காக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விளங்கி வருகிறது. EPFO தொடர்ந்து பல விதிகளை முன்வைத்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில் ஒன்று தான் லாயல்டி-கம்-லைஃப். இந்த விதியின் மூலம் EPFO-வில் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் 50 ஆயிரம் இலவசமாக பெறலாம். இதற்கு ஊழியர்கள் ஒரு கம்பெனியில் இருந்து இன்னொரு கம்பெனிக்கு மாறும் பொழுது ஒரே EPFO கணக்கை தொடர வேண்டும். இப்படி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஒரே EPFO கணக்கில் தொடர்ந்து வந்தால் லாயல்டி-கம்-லைஃப் என்ற விதியின் மூலம் ஊழியர் 50 ஆயிரம் பெறலாம். அதுமட்டுமின்றி Basic சம்பளம் 10 ஆயிரத்திற்குள் வாங்குபவர்களுக்கு ரூ.40,000 மற்றும் அதே போல் 10 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ.50,000 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. PF அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 50 ஆயிரம் போனஸ்