பொதுவாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, அவர்களின் ஊதியத்தில் இருந்து PF கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் பணியில் இருக்கும் பொழுது அவர்களின் அவசர தேவைக்கேற்ப குறைந்த சதவீதத்தில் பணம் எடுக்க EPFO நிறுவனம் வசதி தந்துள்ளது. இந்நிலையில் EPFO நிறுவனம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போதைய காலகட்டத்தில் ஒரு இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கி கொண்டிருக்கும் ஆதார் அட்டை தான் எல்லா இடங்களிலும் பயன்பட்டு வருகிறது. அதே போல் PF வில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய ஆதார் அட்டை பயன்பட்டு வந்த நிலையில், பிறந்த தேதியை திருத்தம் செய்யும் ஆவணமாக ஆதார் அட்டையை கருத முடியாது என்று கூறி ஏற்கக்கூடிய பட்டியலில் இருந்து ஆதார் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே இனிமேல் பிறந்த தேதி திருத்தம் செய்ய நினைப்பவர்கள் ஆதாரை ஆவணமாக இணைக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.