
Breaking news – “Pirates of the Caribbean” பட பிரபலம் திடீர் மரணம்: சினிமாவில்1 வெளியாகும் ஒரு சில படங்கள் நம் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும். அந்த வகையில் ரசிகர்களை அதிகம் ஈர்த்த திரைப்படம் என்றால் அது “பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்”. ஹாலிவுட்டில் வெளியான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 6 பார்ட்களாக வெளியானது. ஒவ்வொரு பார்ட்டும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் இப்படங்கள் அதிக வசூலை குவித்ததே என்று சொல்லலாம். மேலும் இந்த படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் கட்டப்பட்டு இருந்தன. அதில் ஒருவர் தான் டமாயோ பெர்ரி (49). இவர் பொதுவாக கடல் சாகசத்தில் ஈடுபட்டு வருபவர். அதனால் அவர் அலையில் சறுக்கி விளையாடும் கடல் ஸர்பிங் சாகசத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!

இந்நிலையில் ஹவாய் தீவிலுள்ள கோட் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ஸர்பிங்கில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அங்கு சுற்றித்திரிந்த சுறா மீன் அவரை கடித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடலில் அவர் தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்த சிலர் உடனே காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து காவல்துறை மீட்பு படையினருடன் கடலுக்குள் சென்ற நிலையில் டமாயோ பெர்ரி காப்பற்றி முதல் உதவி கொடுக்கப்பட்டது. இருப்பினும் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இவரின் உயிரிழப்பு ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் ப்ளூ கிரஷ், ஹவாய்-ஓ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடேங்கப்பா… மகாராஜா படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? ரசிகர்கள் கொண்டாட்டம்!
தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024
சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
கள்ளக்குறிச்சி விவகாரம் – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு
T20 semi final 2024: வெஸ்ட் இண்டீஸ் அணியை ஓடவிட்ட சவுத் ஆப்பிரிக்கா
↩︎tamil cinema news latest update
hollywood cinema – kollywood cinema – bollywood cinema news