Home » செய்திகள் » வானில் பறந்த விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பிரச்சனை… தரையில் விழுந்ததால் 5 பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்!

வானில் பறந்த விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பிரச்சனை… தரையில் விழுந்ததால் 5 பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்!

வானில் பறந்த விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பிரச்சனை... ரையில் விழுந்ததால் 5 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்!

5 பேர் உயிரிழப்பு

சமீபத்தில் ஒரு விமானம் கீழே விழுந்து பெரும் விபத்தை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் ஓர் இடத்தில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்கா டென்னஸி மாநிலம் நாஷ்வில்லியில் உள்ள நெடுஞ்சாலை அருகே ஒரு விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் என்ஜின் கோளாறு ஏற்பட்ட நிலையில் கீழே இறக்க விமான நிலையத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கே செல்வதற்கு முன்னரே என்ஜின் செயலிழந்து போனதால் கீழே விழுந்ததில் தீப்பற்ற தொடங்கியுள்ளது. விமான ஒன்றில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இருந்த 5 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விமான விபத்து குறித்து நாஷ்வில்லி பெருநகர காவல்துறை ஒருவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளார்.

ஆசை ஆசையாய் கேட்ட பொண்டாட்டி.., செய்ய மறுத்த கணவன்.., புதுமணத் தம்பதி விபரீத முடிவு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top