உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய நபர்கள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் , பல மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த விழாவிற்கான தீவிரமான ஏற்பாடுகளை உத்திரபிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் எதிர்க்கட்சிகள், இந்து அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் இது இந்தியாவின் பன்முக தன்மைக்கு எதிரான செயல் என்று கூறி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்ல போவதில்லை என்று பல்வேறு காரணங்களை கூறி விழாவினை புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக 11 நாட்கள் விரதத்துடன் கூடிய பூஜையை தொடங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.