
பிரதமர் மோடிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல்: நாடாளுமன்ற தேர்தல் தற்போது பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், இப்பொழுது வரை 5 கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. வருகிற ஜூன் 1ம் தேதியுடன் நாடாளுமன்ற தேர்தல் மொத்தமாக முடிவுக்கு வர இருக்கிறது. எனவே அடுத்த கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி தொடர்ந்து மக்களின் வாக்குகளை சேகரிக்க பரப்புரையாற்றி வருகின்றனர். குறிப்பாக இரு கட்சியினரும் தங்களுக்கு இருக்கும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதற்கிடையில் தேர்தல் ஆணையம் மதம், ஜாதி சம்பந்தமாக எதுவும் பேசக்கூடாது என்று எச்சரித்தது. இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை புரசைவாக்கத்தில் இருக்கும் என்.ஐ.ஏ. அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் இந்தியில் பேசி பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமருக்கே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. PM Modi news – Prime Minister news – dead Threat news
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
மீண்டும் தியேட்டரில் ரிலீஸாகும் மாஸ்டர் திரைப்படம்
சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு