மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் மூலம் தற்போது ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 109 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இன்டெர்ன்ஷிப் திட்டம் :
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து தற்போது 3வது முறையாக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டே இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்கவில்லை என்று தெரிவித்து வந்தனர். PM Modi Internship Program
இந்நிலையில் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மேலும் அந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக தனியார் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் முறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
1.55 லட்சம் பேர் விண்ணப்பம் :
பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் மூலம் இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் பாலமாக இருக்கும் என்றும், அத்துடன் திறமையான இளைஞர்களை கண்டறிந்து தகுதியான வேலைவாய்ப்பை உருவாக்கித் தர முடியும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தீபாவளியை முன்னிட்டு காம்போ ஆஃபர்களை அறிவித்த ஆவின் – முழு விவரம் உள்ளே !
மேலும் இந்த பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் கீழ் தற்போது ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 109 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.