கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் அடுத்த 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளதால்.
இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு :
அந்த வகையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள் தமிழக போலீசாரிடம் சுற்றுலா பயணிகளை வழக்கம் போல் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல அனுமதியுங்கள் என்று கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டபத்துக்கோ அல்லது அதன் அருகில் இருக்கும் புத்தக நிலையம் மற்றும் விவேகானந்தர் மண்டப பொறுப்பாளர் அலுவலகத்துக்கோ செல்ல அனுமதி இல்லை என்றும்,
சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் உள்ள ஸ்ரீபாதம் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தியானம் செய்யும் பிரதமரை சந்திக்க சுற்றுலா பயணிகளுக்கோ அல்லது பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனவே பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ளும் 3 நாட்களும் சுற்றுலா பயணிகள் படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்று வர எந்த தடையும் இல்லை என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் – நீதிமன்றம் வைத்த செக்? என்ன நடந்தது?
அதே நேரத்தில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளத்தில் 8 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே படகில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்
அவ்வாறு பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.