இந்தியாவில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான, “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்” தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சொந்த வீடு இல்லாத ஏழை மக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர். எனவே இந்த திட்டத்தின் கீழ் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
- இந்த திட்டத்தில் பயனடைய வேண்டும் என்றால் விண்ணப்பிப்பவர்கள் முதலில் இந்தியாவில் இருக்க வேண்டும். மேலும் வீடு இல்லாதவர்களாகவும், சாதாரண கூரை வீடு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிப்பவர்கள் வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஆண்டு வருமானம் ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை இருக்க வேண்டும். நிலமற்ற குடும்பங்கள், சாதாரண வேலை மூலம் வருமானம் ஈட்டுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- 25 வயதுக்கு மேற்பட்டோர் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், மற்றவர்கள், சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- குறிப்பாக விண்ணப்பிப்பவர்களின் வாக்காளர் அடையாள அட்டை முக்கியம். மேலும் அவர்களுடைய பெயர்கள் ரேஷன் கார்டு அல்லது பிபிஎல் பட்டியலில் இருக்க வேண்டும்.
அனுமன் வேடமிட்டு நடித்த நாடக கலைஞன் திடீர் மரணம்.., அயோத்தியில் நடந்த சோகமான சம்பவம்!!
எனவே விண்ணப்பத்தாரர்களின் அனைத்து ஆவணங்களையும் பொது சேவை மையத்திற்கு கொண்டு சென்று வீட்டு வசதித் திட்ட உதவியாளரிடம் கொடுத்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.