விமானப்படை தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அக்டோபர் 6ம் தேதி தமிழகம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் பிரதமரின் வருகையை தொடர்ந்து தீவிர பாதுகாப்புகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அக்டோபர் 6ம் தேதி தமிழகம் வருகை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விமானப்படை தின அணிவகுப்பு :
சென்னை மெரினாவில் நடைபெறும் விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானம் இயக்குவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இரண்டு மணி நேரங்கள் வரை விமான வழித்தடம் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 3 ,5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விமான பயணிகள் இதற்க்கு ஏற்றவாறு தங்கள் பயண திட்டத்தை வடிவமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. pm Modi visit Tamil Nadu on October 6 to participate in the Air Force Day Parade 2024
அத்துடன் மெரினாவில் வான்படை சாகசம் காரணமாக மெரினா பகுதி சிவப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக அங்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெக கட்சியின் முதல் மாநாடு: நாளை பந்தக்கால் நடும் விழா – பணிகள் விறுவிறுப்பு!
பிரதமர் மோடி தமிழகம் வருகை :
இதனையடுத்து பிரதமர் மோடி சென்னையில் நடைபெறும் வான்படை சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் அக்டோபர் 6ம் தேதி சென்னைக்கு வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் வருகைக்காக தீவிர பாதுகாப்புகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.