
PM MODI: உலகத்திலேயே பிரதமர் மோடி தான் பர்ஸ்ட்: இன்றைய சமுதாயத்தில் சோசியல் மீடியா மக்களிடம் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தெளிவாக சொல்லப்போனால் சமூக வலைதளங்களில் கணக்கு தொடராத ஆட்களே இருக்க முடியாது. அப்படி கணக்கு இல்லாதவர்களை பார்ப்பது அரிதோ அரிது. மேலும் இந்த சோசியல் மீடியா மூலம் ஒரு கருத்தை தெரிவித்தால் அது உலக முழுவதும் இருக்கும் மக்களுக்கு சென்றடைகிறது.
இதனாலேயே அரசியல்வாதி, சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண நடுத்தர மக்கள் வரை சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சில அரசியல்வாதிகள் இதன் மூலம் தேர்தல் பிரச்சாரமே மேற்கொண்டு வந்துள்ளனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் ,மாநில முதல்வராக இருந்த போதே எக்ஸ் தளத்தில் கணக்கு தொடங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
உலகத்திலேயே பிரதமர் மோடி தான் பர்ஸ்ட்
அது மட்டுமின்றி அவரின் கணக்கில் இருந்து அரசின் திட்டங்கள் குறித்து பதிவிடுவது மற்றும் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது என தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அதுமட்டுமின்றி 2009 ம் ஆண்டு முதல் எக்ஸ் தளத்தில் கணக்கை தொடங்கிய மோடியை கிட்டத்தட்ட 10 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.
Also Read: ஜப்பானில் ஒரு தண்ணீர் பாட்டில் ரூ 1 லட்சமா? – அப்படி என்ன விசேஷம் இருக்கு இதுல?
மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பிடெனை 3 கோடி பேர் Follow செய்து வரும் நிலையில், அவரை விட மோடி Followers வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மோடி தனது X பக்கத்தில், ” X தளத்தில் சுமார் 10 கோடி பேர் என்னை பின்தொடர்கின்றனர்.
மேலும் இதன் மூலம் என்னுடைய கருத்துகள் மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவை வருங்காலத்திலும் தொடரும்’’ என தெரிவித்துள்ளார்.
பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி
சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி