
‘கொரோனா தடுப்பூசி” சான்றிதழில் பிரதமர் மோடியின் போட்டோ நீக்கம்
‘கொரோனா தடுப்பூசி” சான்றிதழில் பிரதமர் மோடியின் போட்டோ நீக்கம்: உலக நாடுகளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உலுக்கி எடுத்த கொரோனா வைரஸ் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வைரஸ் வீரியம் எடுத்து வரும் நிலையில், இதை தடுக்க அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்ப்ட்னிக்-வி, நோவாக்ஸ், பைஃசர் என பல தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு தற்போது பக்க விளைவுகள் வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். மேலும் தடுப்பூசி ஊசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் பதித்து வழங்கப்படும். இந்நிலையில் இந்தியாவில் இந்த ஊசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. அதாவது கோவிட் சான்றிதழ்களில் மோடியின் புகைப்படம் இதில் இடது பக்கம் அமைந்திருக்கும். ஆனால், தற்போது இதில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.