மகாராஷ்டிரா சிவாஜி சிலை சேதமடைந்ததை தொடர்ந்து தலைகுனிந்து சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மகாராஷ்டிரா மாநிலம்:
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்திற்கு அருகே உள்ள ராஜ்கோட் கோட்டையில் 35 அடியில் பிரமாண்டமாக மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வெண்கல உருவச் சிலை அமைக்கப்பட்டது.
இந்த சிலையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
சிவாஜி சிலை சேதம் :
இந்நிலையில் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் சத்ரபதி சிவாஜியின் சிலை கீழே விழுந்து நொறுங்கியது.
35 அடி உயர சத்ரபதி சிவாஜியின் சிலை, தலை, கை மற்றும் கால் எனத் தனித் தனியாக முழு சிலையும் விழுந்து நொறுங்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருத்து :
இந்த சிலை சேதமடைந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் சிலை திறக்கப்பட்ட எட்டு மாதத்தில் சிலை சேதமடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிலை சேதத்திற்கான சரியான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அத்துடன் சிலை அமைக்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தற்போது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பேசிய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி – அண்ணாமலை லண்டன் சென்றதையடுத்து தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவிப்பு !
பிரதமர் மோடி மன்னிப்பு :
இதனையடுத்து இன்று அரசு முறை பயணமாக மும்பை வந்துள்ள பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், சத்ரபதி சிவாஜி ஒரு மன்னர் மட்டுமல்ல என்னைப் பொறுத்தவரைக் கடவுளுக்கு நிகரானவர்.
அத்துடன் இந்தியத் தாயின் மகனான சத்திரபதி சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல, மேலும் எனது கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் தலைகுனிந்து அவரது காலடியில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.