பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது சேதத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றன.
மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது
மகாராஷ்டிரா:
மகாராஷ்டிராவில் சிந்துதுர்க் மாவட்டத்தில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை முழுவதும் உடைந்து விழுந்து சுக்குநூறாக நொறுங்கியுள்ளது. பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயரம் கொண்ட சிலை தற்போது உடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி சிவாஜியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் ஆய்வு :
மேலும் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், சத்ரபதி சிவாஜி சிலை சேதத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட சிறிது காலத்திலேயே தற்போது சிலை சேதமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.