பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விஸ்வகர்மா திட்டம் :
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்பது சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்துவதாகவும், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது என்றும், தற்போது சமூக நீதி அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கடிதம் :
முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில் முறையை வெளிப்படுத்துகிறது. ஆகையால் விஸ்வகர்மா திட்டத்தை தற்போது தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது. அத்துடன் விஸ்வகர்மா திட்டத்தை ஆராய தமிழ்நாடு அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு, விரிவான ஆய்வு செய்யப்பட்டது.
திட்டத்தில் மாற்றம் செய்திட மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, அதனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் மத்திய அரசு அளித்த பதிலில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை குறிப்பிடப்படவில்லை.
ICAI தேர்வுகள் 2025 தேதி மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
இதன் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கென விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் சமூக நீதி அடிப்படையில் சாதி பாகுபாடு இல்லாமல் கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புது திட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள் :
ஆண்கள் 2 திருமணம் கட்டாயம் – மீறினால் சிறை தண்டனை!
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – ஃபெங்கல் புயலால் அடுத்த 5 நாட்கள் நடக்க போவது என்ன?
ஐபிஎல் 18ல் அறிமுகமாகும் 13 வயது சிறுவன் – கோடிகளில் வாங்கிய RR அணி – யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
எலான் மஸ்க் Time Travel செய்தாரா? அவரே காட்டிய முக்கிய ஆதாரம்!
சுற்றுலாவுக்கு குறைந்த பட்ஜெட்டில் எங்கே செல்லலாம்? தமிழகத்தில் உள்ள டாப் 3 இடங்கள்!