PM விஸ்வகர்மா யோஜனா திட்டம் 2024 ! வங்கி கணக்கில் 15,000 வரவு - Rs.3,00,000 வரை லோன் - ஏகப்பட்ட சலுகைகள் !PM விஸ்வகர்மா யோஜனா திட்டம் 2024 ! வங்கி கணக்கில் 15,000 வரவு - Rs.3,00,000 வரை லோன் - ஏகப்பட்ட சலுகைகள் !

மத்திய அரசின் PM விஸ்வகர்மா யோஜனா திட்டம் 2024 அறிவிப்பின் மூலம் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள், இந்த திட்டத்திற்கான அடிப்படை தகுதி , தேவையான சான்றிதழ்கள் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தேவையான தகவல்கள் முறையே கீழே தரப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் “PM விஸ்வகர்மா திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு சுமார் ரூ. 13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் உள்ள கைவினைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் PM விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் குரு-சிஷ்ய பரம்பரை வளர்ப்பதற்கான அல்லது குடும்ப அடிப்படையிலான பயிற்சியை வலுப்படுத்துதல்.

கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மூலம் தரத்தை மேம்படுத்துதல்.

விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்.

விண்ணபப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது 18 வயதுக்கு மேல் மற்றும் 60 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

அத்துடன் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் பணிபுரிபவர்களாக இருக்க கூடாது.

மேலும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.

இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் வழங்கப்படும் எந்தவிதமான லோன்களையும் பெற்றிருக்க கூடாது.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து தொடர்புடைய வர்த்தகச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

தச்சர் (சுதார்)

படகு தயாரிப்பாளர்

கவசம் தயாரிப்பவர்

கொல்லர் (லோஹர்)

சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்

பூட்டு தயாரிப்பவர்

பொற்கொல்லர் (சோனார்)

குயவர் (கும்ஹார்)

சிற்பி (மூர்த்திகர், கல் தச்சர்), கல் உடைப்பவர்

காலணி தைப்பவர் (சார்மர்)/ காலணி தொழிலாளி/ காலணிக் கைவினைஞர்

கொத்தனார் (ராஜமிஸ்திரி)

கயிறு நெசவாளர்/ கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர்

பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரியம்)

முடி திருத்தும் தொழிலாளர் (நயி)

பூமாலை தொடுப்பவர் (பூக்காரர்)

சலவைத் தொழிலாளி (டோபி)

தையல்காரர் (டார்ஸி)

மீன்பிடி வலை தயாரிப்பவர்

மத்திய அரசின் பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்.

மேலும் தொழிலை மேம்படுத்துவதற்கு ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி செய்து தரப்படும்.

இதனை தொடர்ந்து ரூ. 2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் விண்ணப்பதாரர்களின் சம்மந்தப்பட்ட தொழில் சார்ந்த திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது ஊக்கத்தொகை தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு PM விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அவர்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் கருவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை போன்ற பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் PM விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல், தொழில்முறை தகவல் மற்றும் தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இதனை தொடர்ந்து கிராம பஞ்சாயத்து அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு (ULB) மூலம் உங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் சரிபார்ப்புக்குப் பிறகு, நீங்கள் தெரிவித்த அனைத்துத் தகவல்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் உங்களின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும்.

பான் கார்டு

வருமான சான்றிதழ்

ஜாதி சான்றிதழ்

அடையாள அட்டை

ஆதார் அட்டை

முகவரி ஆதாரம்

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

வங்கி பாஸ்புக்

செல்லுபடியாகும் மொபைல் எண்.

அதிகாரபூர்வ இணையதளம்VIEW
PM விஸ்வகர்மா யோஜனா வழிகாட்டுதல்கள் PDFCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா வழிகாட்டுதல்கள் PDF பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *