PNB ஆட்சேர்ப்பு 2024. பஞ்சாப் தேசிய வங்கி, புது தில்லியை தலைமையாக கொண்ட ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாகும். தற்போது இந்த வங்கியில் வெவ்வேறு துறைகளில் 1000துக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
PNB ஆட்சேர்ப்பு 2024
வங்கியின் பெயர்:
பஞ்சாப் தேசிய வாங்கி (PNB)
பணிபுரியும் இடம்:
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் பணியமர்த்தப்படுவார்கள்.
காலிப்பணியிடங்கள் பெயர்:
கடன் அதிகாரி (OFFICER CREDIT)
அந்நிய செலாவணி மேலாளர் (MANAGER FOREX)
இணைய பாதுகாப்பு மேலாளர் (MANAGER CYBER SECURITY)
சைபர் பாதுகாப்பு மூத்த மேலாளர் (SENIOR MANAGER CYBER SECURITY)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
கடன் அதிகாரி – 1000
அந்நிய செலாவணி மேலாளர் – 15
இணைய பாதுகாப்பு மேலாளர் – 5
சைபர் பாதுகாப்பு மூத்த மேலாளர் – 5
மொத்த காலியிடங்கள் – 1025
கல்வித்தகுதி:
கடன் அதிகாரி –
பட்டய கணக்காளர்(CA)/ செலவு மேலாண்மை கணக்காளர்(CMA)/ பட்டய நிதி ஆய்வாளர்(CFA)/ MBA அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் குறைந்தப்பட்சம் 60 சதவீத பதிப்பெண்களுடன் பெற்றிருக்கவேண்டும்.
அந்நிய செலாவணி மேலாளர்-
MBA அல்லது வணிக மேலாண்மை சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் குறைந்தப்பட்சம் 60 சதவீத பதிப்பெண்களுடன் பெற்றிருக்கவேண்டும், மேலும் அதே துறையில் 2 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
இணைய பாதுகாப்பு மேலாளர் –
பொறியியல்/ தொழில்நுட்பம்/கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ மின்னணுவியல் மற்றும் தொடர்பு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் குறைந்தப்பட்சம் 60 சதவீத பதிப்பெண்களுடன் பெற்றிருக்கவேண்டும், மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கவேண்டும். pnb recruitment 2024 so notification 1025 post
சைபர் பாதுகாப்பு மூத்த மேலாளர் –
பொறியியல்/ தொழில்நுட்பம்/கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ மின்னணுவியல் மற்றும் தொடர்பு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் குறைந்தப்பட்சம் 60 சதவீத பதிப்பெண்களுடன் பெற்றிருக்கவேண்டும், மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 4 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கவேண்டும்.
தேசிய பாதுகாப்பு அகாடமி ஆட்சேர்ப்பு 2024 ! மொத்தம் 198 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயது தகுதி:
கடன் அதிகாரி – 21 முதல் 28 வயதிற்குள் இருக்கவேண்டும்
அந்நிய செலாவணி மேலாளர் & இணைய பாதுகாப்பு மேலாளர் – 25 முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும்
சைபர் பாதுகாப்பு மூத்த மேலாளர் – 27 முதல் 38 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளம்:
கடன் அதிகாரி – ரூ.36,000 – 63480/-
அந்நிய செலாவணி மேலாளர் & இணைய பாதுகாப்பு மேலாளர் – ரூ.48,170 – 69810/-
சைபர் பாதுகாப்பு மூத்த மேலாளர் – ரூ.63,480 – 78230/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PwBD வேட்பாளர்களுக்கு ரூ.59/-
மற்ற வகை வேட்பாளர்களுக்கு – ரூ.1180/-
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 07.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 25.02.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் அதனை தொடர்ந்து நேர்காணல் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். pnb recruitment 2024 so notification 1025 post
ஆன்லைன் எழுத்துதேர்வுக்கான தமிழ்நாடு தேர்வு மையங்கள்:
சென்னை, கோவை மற்றும் திருச்சி
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.