தற்போது சென்னை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் பூத் அமைக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் நிலைய பூத்துகள் அமைக்கப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் பூத்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மருத்துவருக்கு கத்திக்குத்து :
சென்னையில் உள்ள கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜியை நேற்று இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அந்த நபரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்பதால் இவ்வாறு செய்ததாக கைதான விக்னேஷ் வாக்குமூலம் அளித்தார்.
அத்துடன் இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவ சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் காவல் பூத் :
இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட நிலையில் அனைத்து இடங்களிலும் காவல் பூத் அமைக்கப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 15 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
அந்த வகையில் சென்னையில் உள்ள 19 அரசு மருத்துவமனைகளில் 9 இடங்களில் காவல் நிலையங்கள் மற்றும் பூத்துகள் உள்ளன. மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மீதமுள்ள 10 மருத்துவமனைகளிலும் காவல் நிலைய பூத்துகள் அமைக்கப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகள் :
விசிக ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி – அடக்கடவுளே என்ன ஆச்சு
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் தெரியுமா?
2025 முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் ரூ. 1000
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024 – உள்துறை அமைச்சகம் ஒப்புதல்!